உள்நாடு

இரத்தினபுரியில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை!

இரத்தினபுரி மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளை விவாதித்து அவற்றுக்கான தீர்வினை பெற்று கொடுப்பதற்காக விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒன்று இன்றையதினம் (26) இரத்தினபுரியில் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வளர்ச்சி தேவைப்படும் இ.போ.ச பஸ் டிபோக்கள் மற்றும் இலாபமின்மையால் சேவையில் இயங்காத பேருந்துகளை வழிநடத்துதல், கடந்த ஆண்டுகளில் பல்வேறு காரணங்களுக்காக இயக்கப்படாத பேருந்துகளை
வழிநடத்துதல், போக்குவருத்து தேவைப்படும் இடங்கள் பற்றிய தகவல்கள் ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வை பெற்று கொடுத்தல், மோட்டார் போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய சேவை நிலையங்களில் சேவைத் தேவைகள் மற்றும் தேசிய போக்குவரத்து நிறுவனத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் டிப்போக்களில் உள்ள சிக்கல்கள் குறித்தும் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கிராமிய வீதிகள், பொது போக்குவரத்து வீதிகளின் அபிவிருத்திப் பணிகளின் நிலைபாடு குறித்தும்
கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் 2025-2026 ஆண்டுகளுக்கான வீதி பாதுகாப்புத் திட்டத்தைத் தயாரிப்பதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில்
சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் சாந்த பத்மகுமார, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனக சேனாரத்ன, சுனில் ராஜபக்ஷ, நிலுஷா லக்மாலி, உபுல் கித்சிறி, வசந்த புஷ்பகுமார, சப்ரகமுவ மாகாண பதில் பிரதம செயலாளர் தர்ஷன சமரசேகர, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த உட்பட அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

இருப்பு, ஒற்றுமை பற்றி வாய்கிழியப் பேசுவோர், சமூகப் பிரதிநிதித்துவங்களை ஒழிக்க முயற்சி – ரிஷாட்

கொரோனா தடுப்பூசி முதலில் முப்படைகளுக்கு

PANDORA PAPERS : திரு.நடேசனுக்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பாணை