வகைப்படுத்தப்படாத

இரத்தினபுரியில் அதிக மழை

(UDHAYAM, COLOMBO) – இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அது 65.5 மில்லி மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலி, கொழும்பு, நுவரெலியா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்களவு மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த மோரா சூறாவளி இன்று காலை 6.00 மணி அளவில் பங்களாதேஸ் கரையை மணிக்கு 117 கிலோமீற்றர் என்ற வேகத்தில் தாக்கியுள்ளது.

இதனால் ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி அனுப்பப்பட்டுள்ளதாக பங்களாதேஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூறாவளியானது நாளைய தினம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியை நோக்கி நகரும் என்று இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் நாகாலாந்து, அசாம், மெகாலயா மற்றும் அருணாச்சல்பிரதேஸ் ஆகிய பகுதிகளில் மணிக்கு 100 தொடக்கம் 150 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமேசான் நிறுவனத்தில் பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்

தொழிலுக்காக சென்றுள்ள மேலும் சிலர் குறித்து தகவல்கள் இல்லை – [PHOTOS]

Narammala Pradeshiya Sabha Dep. Chairman further remanded