உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரி மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் 105 ஆவது வருட நிறைவு விழா!

இரத்தினபுரி மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் 105 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இரத்தினபுரி மாவட்ட சாரணர் அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாம் ஒன்று கடந்த சனிக்கிழமை (18) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி பயிற்சி முகாம் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகி 20 ஆம் திகதி வரை குருவிட்ட மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இரத்தினபுரி, நிவித்திகல, பலங்கொடை, எம்பிலிபிட்டிய ஆகிய கல்வி வலயங்களை உள்ளடக்கி சுமார் 1200 மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்றனர்.

இதில் திறந்தவெளி முகாம்கள் தவிர, விசேட செயற்பாடுகளும், ‘ஜோட்டா ஜோட்டி’ விமான சாரணர் ஜம்போரி, ‘போதக ரன்தஹர’ பிள்ளைகளுக்கான விசேட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் குருவிட்ட பிரதேச சபை தலைவர் மற்றும் இரத்தினபுரி மாவட்ட சாரணர் அமைப்பின் ஆணையாளர் மெரில் திஸாநாயக்க, உதவி மாவட்ட ஆணையாளர் (நிர்வாக பிரிவு) குமாரி திலகரத்ன, உதவி மாவட்ட ஆணையாளர் (நிகழ்ச்சி பிரிவு) சதுர சாகர, உதவி மாவட்ட ஆணையாளர் (பெண்கள் பிரிவு) வசந்தா ஹேமகுமாரி, மாவட்ட சாரண ஆசிரியை டிரோஷா செனவிரத்ன, நிறைவேற்றுக்குழுத் தலைவர் எம்.கே.சிரிவர்தன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor

களனி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்!

கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

editor