வணிகம்

இரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் கைக்கடிகாரம்

(UTV |  அமெரிக்கா) – இரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் புதிய கைக்கடிகாரத்தை, ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நடப்பாண்டிற்கான ஆப்பிள் ப்ளைஸ் (flies) நிகழ்ச்சியில், ஐபாட் ஏர்-ஐ மற்றும் புதிய சீரிஸ் 6 கைக்கடிகார மாடல் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.

எஸ்5ல் இருந்து மேம்படுத்தப்பட்ட எஸ்6 பிராசஸரின் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரம், 15 நொடிகளில் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட்டு திரையில் காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 12 தொடர் வெளியீடு, தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலைகளும் உயர்வு

இந்தியாவிடம் கடனுதவி கேட்கும் இலங்கை

சடுதியாக உயர்ந்த மரக்கறிகளின் விலை