வகைப்படுத்தப்படாத

இரண்டு வாரங்களுக்குள் அரசியல், பொருளாதார ரீதியான முக்கிய தீர்மானங்கள்

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரசியல், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வார் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினதும், அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் நாட்டை வலுவான முறையில் முன்னெடுத்துச் செல்வது இதன் நோக்கமாகும் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கூறினார்.

இது அரசியல் ரீதியான தீர்மானமன்றி நாட்டுக்கான தீர்மானமாகும் நாட்டின் பொருளாதாரத்தை சரியான திசையில் முன்னெடுப்பது எதிர்பார்ப்பாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தில் சிறிதளவு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Related posts

உரத்தை விநியோகிக்க விரிவான நடவடிக்கை

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

Met. predicts spells of showers today