வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில், வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி, வாங்குவா பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகளிலும் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த அவர்கள் நால்வரும் வெல்லவாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் கர்ப்பிணித் தாயும் அடங்குவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் திஸ்ஸமஹாராம மற்றும் ஒக்கம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்
விபத்து குறித்து வெல்லவாய காவல் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
