உள்நாடு

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – பலர் காயம்

மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகளே இந்த விபத்தில் சிக்கியுள்ளன.

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 29 பேர் கந்தர மருத்துவமனையிலும், மேலும் 6 பேர் மாத்தறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் கைவரிசை காட்டிய திருடர்கள்

editor

சாய்ந்தமருது நகர சபை விசேட வர்த்தமானி இரத்து

கட்டுப் பணம் செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா

editor