வகைப்படுத்தப்படாத

இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு ஏற்பட்டுள்ள கொடூரம்

(UDHAYAM, COLOMBO) – வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் காவற்துறை தெரிவித்துள்ளனர்.

வவுனியா – சண்முகபுரம் கிராமத்தில் வசிக்கும் 40 வயதுடைய முத்துலிங்கம் கனகராஜா இரண்டு பிள்ளைகளின் தந்தையே செட்டிகுளம் வீதியோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், தனது வீட்டுக்கு முன்பகுதியில் நீர்ப்பம்பி திருத்தும் கடை ஒன்றுவைத்து நடாத்திவந்திருக்கின்றார்.

இதேவேளை, நேற்று பிற்பகல் 5 மணிக்கு வவுனியா நகர்பகுதிக்கு சென்றதாகவும் பின், இரவு 9 மணியளவில் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து வீட்டின் முன்னால் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தமது முச்சக்கர வண்டியை, காணிக்குள் எடுத்து விடும்படியும் தான் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாகவும் கூறி தொலைபேசி அழைப்பைத் துண்டித்துள்ளார்.

நீண்டநேரமாகியும் தனது கணவன் வீட்டுக்கு வராதகாரணத்தினால் இரவு 10 மணியளவில் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டபோது, தொலைபேசி இயங்கவில்லை எனவும் கனகராஜாவின் மனைவி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை செட்டிகுளம் – பூவரசங்குளம் வீதியில் சென்ற பொதுமக்கள் வீதியோரத்தில் சடலமாகக் கிடந்த கனகராஜாவைக் கண்டவுடன் செட்டிகுளம் காவற்துறைக்கு தெரியப்படுத்தினர்.

அதனையடுத்து விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவற்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை விலக்கியமை தொடர்பில் குற்றச்சாட்டு

Over 700 arrested for driving under influence of alcohol

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலம் நிராகரிப்பு