உள்நாடுபிராந்தியம்

இரண்டு சகோதரர்களுக்கு இடையே கடுமையான மோதல் – பதுளையில் சம்பவம்

இன்று மாலை (20) பதுளை நகர மத்தியில், இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மூத்த சகோதரர், இளைய சககோதரை அரிவாளால் வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ பேஸ்புக்கில் பதிவிட்டு, இளைய சககோதரர் ஏற்கனவே மூத்த சகோதரனை தாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த நபரின் உயிர், அறுவை சிகிச்சை நிபுணரின் திறமையால் காப்பாற்றப்பட்டது என்றும், காயமடைந்த நபர் சுமார் ஒரு மாத காலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார் என்றும் வைத்தியர் பாலித ராஜபக்ஷ கூறினார்.

இந்த இரண்டு சகோதரர்களும் நீண்ட காலமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, காயங்களை ஏற்படுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் பின்னர், குறித்த நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்த நிலையில், பொதுமக்களின் உதவியுடன் அவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

Related posts

உள்ளூராட்சி தேர்தலில் 23 இலட்சம் பேர் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை – அரசாங்கம் முதல் தடவையாக வீழ்ந்துள்ளது – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor

மின்வெட்டு அவசியமா? இல்லையா? இன்று விசேட கலந்துரையாடல்

editor

13ஐ நடைமுறைப்படுத்துவதே இலங்கையின் அரசியல் நலனுக்கு நன்மை தரும் – டக்ளஸ்

editor