அரசியல்உள்நாடு

இரண்டு கட்சிகளும் ஒன்றிணைவது சாத்தியம் – முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் கூட்டணி அமைத்த பின்னர், அதன் அதிகப்படியான பொறுப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்பார் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தைச் சுத்தம் செய்யும் சிரமதானப் பணியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிறிகொத்தவில் இருந்து வௌியேறி ஐக்கிய மக்கள் சக்திக்கு சென்றவர்கள் மீண்டும் தாய்வீட்டுக்கு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக்களை ஒன்றிணைத்து எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம்.

இரண்டு தலைவர்களும் கூடி மீண்டும் ஆராய்ந்த பின்னர் பொறுப்புக்களை வகிப்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.

எவ்வாறாயினும் சஜித் பிரேமதாச அதிக பொறுப்புகளை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு கட்சிகளும் ஒன்றிணைவது இந்தமுறை சாத்தியமாகும் என தாம் நம்பிக்கை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

one day passport ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கான அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

editor

கொடியாகும்புர பகுதி நீரில் மூழ்கியது