உள்நாடு

இரண்டாவது நாளாகவும் சரிவை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

அமெரிக்கா புதிய வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) இரண்டாவது நாளாக சரிவை பதிவு செய்தது.

இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 284.25 புள்ளிகள் சரிந்து 15,373.35 புள்ளிகளாகவும், S&P SL20 விலைச் சுட்டெண் 101.61 புள்ளிகள் சரிந்து 4,541.71 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது.

இன்றைய வர்த்தக நாள் முடியில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 3.17 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.

Related posts

உயிர்களைக் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு – பிரதமர் ஹரிணி

editor

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி

editor

மண்ணினுள் மறைத்து பாலை மரக் குற்றிகளை கொண்டு சென்றவர் கைது!