கிசு கிசு

இன்ஸ்டாகிராமிலும் வாய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகம்

பிரபல சமூக வலைத்தள செயலியான இன்ஸ்டாகிராமிலும் வாய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் மட்டுமே செய்திகளை ஆடியோவாக பரிமாறிக்கொள்ளும் வசதி இருந்து வந்தது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமிலும் வாய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் செயலியில் தற்போது புதிதாக ஒரு மைக்ரோஃபோன் பட்டன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டனை அழுத்திப் பிடித்துக் கொண்டிருப்பதன் மூலமாக நீங்கள் விரும்பும் தகவலை ஆடியோவாக பதிவு செய்யலாம்.

வாட்ஸ் அப்பை பொறுத்த வரை ஆடியோவை பதிவு செய்வதற்கு முன்பு யாருக்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஆனால், இன்ஸ்டாகிராமின் புதிய வசதியில் முதலில் ஆடியோவை பதிவு செய்த பின்பு, தனிநபருக்கோ அல்லது குழுவையோ தெரிவு செய்து அனுப்பும் வசதி உள்ளது.

 

 

 

 

Related posts

உலகின் மிக வயதான மனிதர் மரணம்…

உலகின் மிக இளம் வயது புத்தக ஆசிரியராக இலங்கை சிறுவன்

சரத்தின் முழியே இனவாதம் : பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியாம்