விளையாட்டு

இன்றைய போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற திமுத் காருணாரத்ன

(UTV|COLOMBO) அவுஸ்திரேலியவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி வீரர் திமுத் காருணாரத்னவுக்கு துடுப்பாட்டத்தின் போது காயமேற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையிலேயே அவருக்கு காயமேற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் கும்மின்ஸ் வீசிய பந்து அவர் மீது பட்டதிலேயே திமுத் காருணாரத்ன காயமடைந்துள்ளார்.

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

2019-2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வா

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவரானார் சுரேஷ் ஐயர்

editor

பரபரப்பான சூழலில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்