வகைப்படுத்தப்படாத

இன்றைய தினம் முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(UDHAYAM, COLOMBO) – இன்று இடம்பெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின்போது தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமந்த ஆனந்த எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்தார்.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் மக்களுக்கு சாதகமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாதநிலையில், இன்றைய மத்திய செயற்குழு கூட்டத்தில் அது தொடர்பில் முக்கியமாக அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, அரச மருத்துவ அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு, மக்களின் நிலைப்பாடுகளை முகப்புத்தக பதிவுகளில் தெளிவாக காண முடியும்.

இந்த நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் முகப்புத்தகம் சென்று, தமது செயற்பாடுகள் குறித்த விமர்சனங்களை அறிந்துகொள்ள முடியும் எனவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Seven injured after lorry loses brakes and crashes into multiple vehicles

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டம் விரைவில்

மூடப்படவுள்ள ஈஃபில் கோபுரம்…