உள்நாடுபிராந்தியம்

இன்றைய தினம் மற்றுமொரு பேருந்து விபத்தில் சிக்கியது

புத்தல – மொனராகலை பிரதான வீதியில், 11 ஆம் மைல்கல் பகுதியில் இன்று (10) மதியம் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்த நிலையில், புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பேருந்தில் பயணித்த சில பயணிகளுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் புத்தல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியில்

பிபிலை துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி – இருவர் காயம்

நாடு முழுவதும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்