உள்நாடு

இன்றைய தினமும் அதிவெப்பமான வானிலை

(UTV|கொழும்பு ) – நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் அதிவெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் அதிவெப்பமான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள், சுகாதார பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய போதியளவான நீரை பருக வேண்டும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, வறட்சி காலநிலை ஏப்ரல் மாத இறுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related posts

பீ.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 797

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கவும்