உள்நாடு

இன்றும் மழையுடனான காலநிலை

(UTV | கொழும்பு) –   மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்னவுக்கு பதவி உயர்வு

SLFP இனது 71வது ஆண்டு நிறைவு விழா இன்று

பாக்கிஸ்தான் நாட்டின் தேசிய தின நிகழ்வு, கொழும்பில்- 2024