சூடான செய்திகள் 1

இன்றும் நாளையும் விசேட ரயில் சேவைகள்

(UTV|COLOMBO) புத்தாண்டில் தூர இடங்களுக்குச் சென்ற மக்களின் நலன்கருதி. இன்றும்  நாளையும் விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய , இன்று மருதானை – மாத்தறை ரயில் நிலையங்களுக்கு இடையிலான இரண்டு விசேட மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன. மருதானையிலிருந்து
மாத்தறை, பெலியத்த வரையிலும், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, காங்கேசந்துறை ஆகிய இடங்களுக்கும் விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அதேவேளை, காங்கேசந்துறை, பெலியத்த ஆகிய இடங்களிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலான மேலதிக இரண்டு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.

 

 

 

 

Related posts

அரசாங்க வைத்தியசாலையாகும் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை

சபாநாயகர் – கட்சித்தலைவர்கள் இடையேயான சந்திப்பு இன்று(07)

போட்டிப்பரீட்சையை நடத்துவதற்கு நீதிமன்றத்தை நாடும் கல்வியைச்சர்!