வகைப்படுத்தப்படாத

இன்றும் நாளையும் தபால் மூல வாக்களிப்புக்கு சந்தர்ப்பம்

(UTV|COLOMBO)-உள்ளூர் அதிகாரசபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் இதுவரை வாக்களிக்காதவர்களுக்கு இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களில் வாக்களிக்கலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இரண்டு கட்டங்களாக இடம்பெற்றன.

அதன்படி முதல் கட்டத்தின் கீழ் கடந்த 22ம் திகதி தேர்தல் அலுவலகங்கள், மாவட்ட செயலக அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தபால் மூல வாக்குப் பதிவுகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் கடந்த 25 மற்றும் 26ம் திகதிகளில் ஏனைய அரச அலுவலகங்களில் தபால் முல வாக்களிப்புக்கான அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் அந்த தினங்களில் வாக்களிப்பை இதுவரை மேற்கொள்ளாத தபால் முல வாக்களார்கள், இன்று மற்றும் நாளைய தினம் தமது வாக்குப் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறினார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

மன்னிப்பு கோரிய சக்கர்பேக்

Three-Wheeler travelling on road erupts in flames

පූජිතගෙන් ප්‍රකාශයක් ගන්න CID සුදානම්