உள்நாடு

இன்றும் நாளையும் சமையல் எரிவாயு விநோயோகம் இல்லை

(UTV | கொழும்பு) –   இன்றும் (26) நாளை வெள்ளிக்கிழமை (27) ஆகிய இரு தினங்களில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

3,500 டொன் எரிவாயு மெட்ரிக் ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே 7,500 டொன் எரிவாயுவை சரக்குகளுடன் செலுத்தியுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

அவ்வாறு செலுத்தப்பட்ட தொகை $6.5 மில்லியன்.

இன்று வரவிருக்கும் கப்பல் தரையிறங்கும் வரை எரிவாயுவை வழங்க முடியாது என லிட்ரோ தெரிவித்துள்ளது.

இதனால் இன்றும் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

இலங்கை துறைமுகத்தை நோக்கி படையெடுக்கும் கப்பல்கள்!

பூஜா பூமி என்ற பெயரில் நில ஆக்கிரமிப்பை கண்டிக்கிறோம் – ஸ்ரீ பிரசாத்.

கொரோனா அச்சுறுத்தல் கருத்திற்கொண்டு கைதிகளை விடுவிக்குமாறு, கோரிக்கை