உள்நாடு

இன்றும் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக 3 மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மொனராகலை மாவட்டத்தின், வெல்லவாய நகர சபை அதிகார பிரதேசம் மற்றும் வெஹெரயாய, கொட்டம்பபொக்க, புத்தல – ரத்னகம முதலான கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தின், உகன – குமாரிகம கிராம சேவகர் பிரிவும், மாத்தளை மாவட்டத்தில், நாவுல – அளுகொல்ல கிராமசேவகர் பிரிவும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மீண்டும் டீசல் தட்டுப்பாடு

தேர்தல் சட்ட விதிமுறை மீறல் தொடர்பில் பொலிஸ் OIC கைது

editor

உலமா சபையின் தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தெரிவு

editor