சூடான செய்திகள் 1

இன்று(14) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் விசேட சந்திப்பு

(UTV|COLOMBO) இன்று(14) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் முற்பகல் இடம்பெறவுள்ளது.

இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், அதன் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிலாப மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும் இதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில், அதன் தவிசாளர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் பாராளுமன்ற  உறுப்பினர்களான டளஸ் அலகப்பெரும ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதன்போது அரசியல் கூட்டணி மற்றும் சமகால அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

அமைச்சரவை மாற்றங்களுடன் கூட்டு அரசாங்கம் தொடரும்

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் மூன்று கோடி ரூபா