சூடான செய்திகள் 1

விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று(08)

(UTV|COLOMBO)- சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விஷேட கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று(08) காலை 9.30 மணியளவில் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள காணி தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சட்டம் தொடர்பில் இதுவரையில் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதத்தில் எடுக்காமல் இருப்பதற்கு இதன்போது கலந்துரையாடப்பட உள்ளது.

Related posts

சண் குகவரதன் இன்று நீதிமன்றில்

விமல் வீரவங்ச குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையானார்

அளுத்கம ஸ்ரீ தம்மானந்த தேரர் தனது 103 ஆவது வயதில் காலமானார்