சூடான செய்திகள் 1

இன்று(04) முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களது அடிப்படை வேதனம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று முதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் எஸ்.அருள்சாமி இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களது வேதனம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும் அவை தோல்வியடைந்மையால் இன்று முதல் தொடர்சச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

இந்தியா-பாகிஸ்தான் போருக்கு வாய்ப்பு-இம்ரான்கான்

அரச நிறுவனங்கள் இரண்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஆசிரியர் வழிகாட்டி கையேடு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு