உள்நாடு

இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம்

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பை இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் – நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழுவும் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று நடைபெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்களின் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

டொலர் நெருக்கடியுடன் எரிபொருள் இறக்குமதி தொடர்பிலும் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

Related posts

கொவிட் – 19 : உலகளவில் பாதிப்பு 16 இலட்சத்தை தாண்டியது

பிரதமரின் மீலாத் வாழ்த்துச் செய்தி

விஜித ஹேரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை- ரோஹித