அரசியல்உள்நாடு

இன்று விசாரணைக்கு வரும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மீறல் மனு

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனு மீதான விசாரணை இன்று வௌ்ளிக்கிழமை (31) நடைபெறவுள்ளது.

இதன் நிமித்தம் பிள்ளையானின் சட்டத்தரணியான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானைச் சந்தித்துள்ளார்.

இதன்போது வழக்கு தொடர்பில் அவருடன் கலந்துரையாடியதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலேயே, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன்படி, தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய சுமார் ஏழரை மாதங்கள் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், தாம் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளமையில் எவ்வித அடிப்படையும் இல்லை எனவும், இதனூடாக தமது உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு கோரி, பிள்ளையான் தாக்கல் செய்த எழுத்தாணை மனு, இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related posts

தவறிழைத்தவர்கள் தப்பவே முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

கரதியான குப்பை மேட்டில் தீ பரவல்

பல்வேறு அரச தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு