உள்நாடு

இன்று முதல் ரூ.700 விலைக் கழிவுடன் சதொசவில் நிவாரண பொதி

(UTV | கொழும்பு) – தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி ஒன்றை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

அரிசி, பால்மா, சீனி, தேயிலை உள்ளிட்டவை அடங்கிய இந்த பொதி ஒன்றின் விலை 1950.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

பொதுவாக சந்தையில் நிலவும் விலையுடன் ஒப்பிடுகையில் இந்த 5 வகை பொருட்களுகளை 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக் கழிவுடன் புத்தாண்டு நிவாரணப் பொதியாக நுகர்வோரினால் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணப் பொதி இன்று தொடக்கம் சதொச கிளைகள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது.

5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் ஐலண்ட் பால்மா, 1 கிலோ சிவப்பு சீனி, 100 கிராம் தேயிலை ஆகியன இதில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

ஷானி அபேசேகரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

19 வயது இளம் பெண் சடலமாக மீட்பு – 30 வயது ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

editor

VAT வரி அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம் – தனுஜா பெரேரா