உள்நாடு

இன்று முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு

(UTV|கொழும்பு)-  பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று (01) முதல் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

´சுபிட்சத்தின் நோக்கு´ என்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கும் கடந்த 14 ஆம் திகதி அனுமதி கிடைத்தாக அரசாங்கம் அறிவித்திருந்தது

அதற்கமைய தற்போது புதிய வரி சலுகை வழங்கப்பட்டுள்ளமை, உரத்திற்கான சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளமை அத்துடன் தோட்ட கம்பனிகளுக்கு கிடைக்கும் நன்மைகளை தொழிலாளர்களும் பெற வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்

“ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05 அல்லது 12 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது”

நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக ‘ரட்டா’ கைது