உள்நாடு

இன்று முதல் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

இன்று (01) அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அதிவேக வீதிகளில் பயணிக்கும் பயணிகள் பேருந்துகளில் உள்ள அனைத்து பயணிகளும் 2025 செப்டம்பர் 1 முதல் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது குறித்து விளக்கமளித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியியலாளர் ஏ.பி. சந்திரபாலா கூறியதாவது:

“2025 செப்டம்பர் 1 முதல், அதிவேக வீதிகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் இலக்கை அடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.” என்றார்.

Related posts

சுகாதார நடைமுறை – பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

களனி கங்கையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

editor

2024 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெறும் பிரபல கிரிக்கெட் தொடர்!