சூடான செய்திகள் 1

இன்று முதல் தினமும் நீர் விநியோகம் தடை

(UTVNEWS|COLOMBO)- வவுனியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று(11) முதல் தினமும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்போது நிலவும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதால், இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தேக்கவத்தை, வைரவ புளியங்குளம், வவுனியா நகர், யாழ். வீதி, இறம்பைக்குளம், குடியிருப்பு, தோணிக்கல், கோவில்குளம், மடுக்கந்த மற்றும் தெற்கு இலுப்பைக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதி

39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் இரத்து

600 கடிதங்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட கணினி மீட்பு