உள்நாடு

இன்று முதல் பல்கலைக்கழகங்கள் திறப்பு

(UTV|கொழும்பு)- பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இன்று(17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி, இன்று முதல் அனைத்து பீடங்களினதும் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அனைத்து துணை வேந்தர்களுக்கும் அறிவித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக பிரிவு பணிப்பாளர், விஜயாநந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

குஷி நகரில் முதலாவதாக தரையிறக்கிய இலங்கை விமானம்

சிந்தித்து தீர்மானியுங்கள் – தவறினால் சிலிண்டரும் இருக்காது. எதிர்காலமும் இருக்காது – ஜனாதிபதி ரணில்

editor

மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது!

editor