உள்நாடு

இன்று முதல் 20 – 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்திலும், காலி மாவட்டத்திலும் 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.

இதற்கமைய, அந்த மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களில் அவர்களுக்கு சைனோபாம் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கொழும்பு மாவட்டத்தில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களுக்கு மேலதிகமாக, விகாரமாதேவி பூங்கா, தியத்த உயன, பனாகொடை இராணுவ முகாம், வேரஹெர இராணுவ வைத்தியசாலையிலும் இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.

இவ்வாறு இன்று ஆரம்பமாகின்ற குறித்த திட்டத்தின் கீழ் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பசில் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்

அவசரமாக கூடுகிறது IMF இன் நிறைவேற்று சபை

editor

மரக்கறி விலைகள் வீழ்ச்சி !