உள்நாடுபிராந்தியம்

இன்று மாலை திஸ்ஸமஹாராம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

திஸ்ஸமஹாராம முதியம்மான பகுதியில் இன்று (26) மாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் 58 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், போர 12 தோட்டா பயன்படுத்தப்படும் கல் கடஸ் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிதாரிக்கும் உயிரிழந்தவரின் மகனின் மனைவிக்கும் இடையிலான உறவின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

கல்முனை மாநகர சபையில் Online Payment System அங்குரார்ப்பணம்

பாராளுமன்றத் தேர்தலுக்கு இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோரின் விபரம் வெளியானது

editor

முன்னாள் எம்.பி சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் – வெடித்தது புதிய சர்ச்சை

editor