உள்நாடு

இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(UTV | கொழும்பு) – வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

2020 ஒக்டோபர் 09ஆம் திகதியளவில் கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Related posts

இலங்கை பெண்களே அவதானம் – மார்பகப் புற்றுநோய் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

editor

சில அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து, சிறப்பு பாதுகாப்புத் திட்டம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க

editor