உள்நாடுகாலநிலை

இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும். 

வடமத்திய மாகாணத்திலும், மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது

Related posts

மலையக மண்ணின் மறுமலர்ச்சிக்காகவும் ஒன்றுபடுவோம் – ஜீவன் தொண்டமான்

மட்டக்களப்பு ஏறாவூரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான 22 கஜமுத்துக்களுடன் இருவர் கைது

editor

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை 24 மணி நேரமும் இயக்க தீர்மானம்

editor