உள்நாடு

இன்று நாடளாவிய ரீதியில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு!

(UTV | கொழும்பு) –இன்று தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்க  தீர்மானித்துள்ளன

இவ் ஆர்ப்பாட்டத்தில் அரச மற்றும் தனியார் துறையின் பல பிரிவுகளை சேர்ந்தவர்களும்கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களை பாதித்துள்ள வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலுள்ள நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதாக தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், சில நிறுவனங்களின் ஊழியர்கள் தமது உணவு நேரத்தில், தமது பணியிடங்களுக்கு முன்பாக அல்லது தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் தமது எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பார்கள்எனவும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

விசேட தடுப்பூசி வேலைதிட்டத்திற்கு அனைத்தும் தயார்

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை

editor

எட்டு உயிர்களை காவுவாங்கிய பாதை – அரச அதிகாரிகள் இன்னும் கண்டுக்கொள்ளவில்லை – பாராளுமன்றத்தில் அஷ்ரப் தாஹிர்

editor