தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் திட்டமிட்டப்படி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என இலங்கை மின்சார சபையின் மின்சார தொழில்நுட்ப வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் கோசல அபேசிங்க இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அனைத்து தொழிற்சங்கங்களும் கூடி ஆராய்ந்ததன் பின்னர் இன்று பிற்பகல் இறுதி முடிவை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.