உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்

(UTV|கொழும்பு) – எட்டாவது பாராளுமன்றத்திற்கு இன்றுடன் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.

இன்று நள்ளிரவு 12 மணியின் பின்னர் பெரும்பாலும் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைவாக 19 ஆவது அரசியல்யாப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்திற்கு அமைய பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார்..

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படவுள்ளது.

Related posts

தேசியக்கொடியை பறக்கவிடுமாறு வேண்டுகோள்

நியாயமான நீதி நிலைநாட்டபட வேண்டும் – ரோஹித அபேகுணவர்தன [VIDEO]

இஸ்லாமிய பாடப் புத்தகங்கள் முதல் பல்வேறு இடங்களில் கடும்போக்குவாதம்