சூடான செய்திகள் 1

இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

(UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இன்று(26) சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனடிப்படையில் உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் இருந்தும் இன்றும் நாளையும் விலகியிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆனால் வழமைபோன்று உயர்தரப் பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜீத தெரிவித்துள்ளார்.

Related posts

போக்குவரத்து குற்றத்திற்கான அபராதம் 15ஆம் திகதி முதல்

நீர் விநியோகத் தடை!

விமான நிலையம் ஜனவரி மாதத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகில் சிறந்த விமான நிலையமாக இயங்கும்- அமைச்சர் நிமல்