சூடான செய்திகள் 1

இன்று சர்வதேச அன்னையர் தினம்…அம்மா என்றழைக்காத உயிரில்லையே!

(UTV|COLOMBO) உலகளாவிய ரீதியில் இன்று (12ஆம் திகதி) சர்வதேச அன்னையர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

விழிகளுக்கு இமைபோல் நமை காத்திடுவாள் : விழுதுகள் நமக்கு வாழ்வின் ஆணிவேரவள் ! நம்பசி போக்கிட அவள்பசியை துறந்திடுவாள் : நம்நலன் காத்திடவே நாளும் உழைத்திடுவாள் ! இன்று உலக அன்னையர் தினம் அஷ்டிக்கப்படுகின்றது.

சுயநல மில்லாத, கலப்படமில்லாத ஒரு அன்பு என்றால் அது தாயிடம் கிடைக்கும் அன்புதான். இளமை நம்மை விட்டு போகும். வளமை நம்மை விட்டு போகாது, ஆனால் உங்களுக்கு எவ்வளவு  வயதாகி தாய் உயிருடன் இருந்தால் அத்தாயின் அன்பு மட்டும் நீங்கள் பிறந்த அன்றுதொட்டு இருந்தது போலவே இறுதிவரை இளமையாகவும் வளமையாகவும் இருக்கும்.

அனைத்து தாய்மார்களையும் இவ்வுலகம் கை கூப்பி வணங்குகின்றது. அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் !

 

 

 

Related posts

கல்வி சார் சமூகம் வளர்ச்சியடைவதன் மூலமே பிரதேசம் எழுச்சி பெறுகின்றது – அமைச்சர் றிஷாட் பதியுதீன்…

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

மொட்டு மேயருக்கு 3 வருட சிறை தண்டனை!