உள்நாடு

இன்று கொழும்புக்கு 18 மணி நேர நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – இன்று காலை 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டை, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

Related posts

கிணற்றில் வீழ்ந்த 6 வயது சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம்

editor

ஈரான் பாதுகாப்பு புலனாய்வு இலங்கைக்குள்…!

பெண்காதி விடயத்தில் அடம்பிடிக்கும் றவூப் ஹக்கீம் : இஸ்லாமிய வழிமுறையை ஏற்க வேண்டும் – ஐக்கிய‌ காங்கிர‌ஸ்