அரசியல்உள்நாடு

இன்று கூடிய SLPP அரசியல் குழு – எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணியில் போட்டி ?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு இன்று (31) கூடியது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் விஜேராமவில் உள்ள இல்லத்தில் இன்று பிற்பகல் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, எதிர்வரும் தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணியில் போட்டியிடுவது மிகவும் பொருத்தமானது என்று அரசியல் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாளைய அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பு இரத்து

கோட்டா நாடு திரும்ப பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசுக்கு பரிந்துரை

CEYPETCO எரிபொருள் விலை அதிகரித்தால் பேரூந்து கட்டணமும் அதிகரிக்கும்