சூடான செய்திகள் 1

இன்று இரவு சில ரயில் சேவைகள் ரத்து

(UTVNEWS|COLOMBO) – இன்று இரவு தபால் ரயில் சேவை உட்பட சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பொத்துஹெர – பொல்கஹவெல ரயில் குறுக்கு வீதி திருத்தப்பணி காரணமாக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை, மட்டக்களப்பு, தலைமன்னார் மற்றும் திருகோணமலைக்கிடையிலான சேவையில் ஈடுபடவிருந்த இரவு தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக இந்த ரயில் நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டைக்கு வரவுள்ள இரவு தபால் ரயில் சேவைகள் 4 இன்றைய தினம் சேவையில் ஈடுபடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வட மாகாணத்திற்கு விஜயம்

மருதமுனையில் இ.போ.சபை பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்

வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு!