உள்நாடு

இன்று ஆர்ப்பாட்டம் – பொலிஸாரின் விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இன்று ஆர்ப்பாட்டம் – பொலிஸாரின் விசேட அறிவிப்பு

இன்று (20) கொழும்பில் பல போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், அதற்கான ஏற்பாடுகளை பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், வீதியில் பயணிக்கும் மக்களுக்கோ அல்லது பொதுச் சொத்துக்களுக்கோ ஏதேனும் சேதம் அல்லது இடையூறுகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் அரசியல் சாசனத்தின் பிரகாரம் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் பொலிஸார் ஒருபோதும் தலையிட மாட்டார்கள் , ஆனால் தற்போது சட்டத்திற்கு எதிராக சிலர் செயற்பட்டு வருகின்றனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு புயலில் சிக்கியது – மீனவர்கள் மாயம்

editor

தப்பிச் சென்ற கைதி ஹெரோயினுடன் கைது

இன்றும் 698 பேர் பூரண குணம்