உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

இன்று அதிகாலை மின்னேரியாவில் கோர விபத்து – 26 பேர் காயம்

கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (12) அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்ற டிப்பர் லொரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்து தொடர்பாக மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

UPDATE: ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர்ருக்கு பிணை

வானிலை முன்னறிவிப்பு

32 வயதுடைய இலங்கை பெண் பிரித்தானியாவில் கொலை – 37 வயது இலங்கையர் கைது

editor