உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இன்று (11) அதிகாலை நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து அவரைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் மாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.

சந்தேக நபர்களைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குடு சலிந்துவிற்கும் நிலங்கவிற்கும் இடையிலான மோதலில் குடு சலிந்துவின் தரப்பில் ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Related posts

அநுராதபுரம் டிப்போவை தற்காலிகமாக மூட தீர்மானம்

பாண் விலையும் ரூ.10 இனால் அதிகரிப்பு

தேசபந்து தென்னகோனை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற பணிப்பு