உள்நாடு

இன்று 3 மணிநேரமும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  இன்றைய தினம் 3 மணிநேரமும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

மேலும் கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியினுள் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு தொடர்பிலான நேர அட்டவணை

Related posts

ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

editor

இலங்கை அரசுக்கு மியன்மார் வேண்டுகோள்

கைதாகியுள்ள எம்பி’கள் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியாது