உள்நாடு

16,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

அரிசி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து இன்று (18) பிற்பகல் 3:30 மணி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியின் அளவு 16,000 மெற்றிக் தொன்களாகும்.

இதில் 6,000 மெற்றிக் தொன் பச்சை அரிசி என்பதோடு, மீதமுள்ள 10,000 மெற்றிக் தொன் நாட்டரிசியாகும்.

சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 04ஆம் திகதி முதல் அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியதன் பின்னர் இதுவரை 16,000 மெற்றிக் தொன் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

ஜூலை மாதம் தொடக்கம், பயண அட்டையை அறிமுகம் செய்ய போக்குவரத்து அமைச்சு

IDH இலிருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளி கந்தக்காட்டிற்கு

Update – நீரில் மூழ்கி உழவு இயந்திரம் விபத்து – நான்காவது ஜனாஸாவும் மீட்பு – தேடும் பணி நிறுத்தம்.

editor