அரசியல்உள்நாடு

இன்னும் கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படவில்லை – ஹர்ஷ டி சில்வா எம்.பி குற்றச்சாட்டு

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக நேற்று (20) முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்த போதிலும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இன்றைய (21) பாராளுமன்ற அமர்வில் வைத்து அவர் இதனைக் கூறினார்.

கணக்காய்வாளர் நாயகப் பதவிக்காக தற்போது சிரேஸ்ட அதிகாரிகள் சேவையில் உள்ள போதும், வெளி நபரை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இன்னும் கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படவில்லை. நேற்று சபாநாயகரிடம் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டபோது, ​​நேற்று நியமிக்கப்படுவார் என்று கூறினார்.”

இப்போது நேற்று முன்தினம் யாரோ ஒருவர் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததாகக் கேள்விப்பட்டோம்.

“அரசாங்கத்தின் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு சிரேஸ்ட அதிகாரிகள் இருக்கும்போது, ​​அரசியல் ரீதியாக வேறு யாரையாவது கொண்டு வர முயற்சிக்கிறார்களா? என்று நாம் அரசாங்கத்திடம் கேட்க வேண்டும்.”

“ஏனென்றால் கணக்காய்வாளர் நாயகம் என்பது ஒரு சுயாதீன நிறுவனம். அந்த சுயாதீன நிறுவனத்திடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.”

“நிதிப் பற்றிய குழுவின் தலைவர் என்ற முறையில் நான் பெரும்பாலும் அதைத்தான் குறிப்பிடுகிறேன்.” என்றார்.

Related posts

ஜனாதிபதியினால் விசேட குழு ஸ்தாபிப்பு

பேரூந்து உரிமையாளர்களுக்கான மானியம்

A30 கொவிட் மாறுபாடு : இலங்கைக்கு அச்சுறுத்தல்