கேளிக்கை

உடலுக்குத்தான் மறைவு ஆனால் மொழிகள் இருக்கும்வரை உங்கள் குரலுக்கு ஓய்வில்லை

(UTV | இந்தியா) – திரைப்பட பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியம் தனது 74 ஆவது வயதில் காலமானார்

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி, ஆரம்பத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.

அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்மோ கருவிகள், சுவாசக்கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், இன்று பிற்பகல் 1:04 க்கு இறையடி எய்தியதாக வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related posts

‘BEAST’ படக்குழுவின் அடுத்த UPDATE

வயதான பெரியவர்களை பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும் – உதயநிதி

நயன்தாராவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்…